Saturday, July 21, 2018

துறவிக்கு இல்லை துன்பம்

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மறைந்த பிறகு, சுவாமி விவேகானந்தரும் மற்றைய சீடர்களுமாக, பன்னிரண்டு பேர் கல்கத்தா அருகில் உள்ள வராநகரில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். இந்த வீடுதான் ராமகிருஷ்ண சீடர்கள் தங்கியிருந்த முதல் ஆஸ்ரமம்.

தினசரி சந்நியாசிகளில் யாராவது ஒருவர் பிக்ஷை எடுத்து வரவேண்டும். எல்லோருக்குமாக சேர்ந்து ஒரு காவி வேஷ்டியும் ஒரு துண்டும் மட்டுமே இருந்தன. பொதுவாக, வீட்டில் இருக்கும் போது அனைவரும் கௌபீனத்துடன் (கோவணம்) இருந்தனர். யார் பிக்ஷைக்கு வெளியே செல்கிறார்களோ அவர் மட்டும் வேஷ்டி துண்டு அணிந்து சென்று வருவார். இளம் சந்நியாசிகளான அவர்களைப் பார்த்து, சிலர் கேவலமாக திட்டி அனுப்பியிருக்கின்றனர். சில நேரங்களில் பிக்ஷை கிடைக்கும். சில நேரங்களில் ஒன்றுமே கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அது காய்ந்துபோன, கெட்டுப்போன ரொட்டிகளாக இருக்கும். அவைகளைப் பாத்திரத்தில் வைத்து, தண்ணீர் ஊற்றி ஊறவைத்தால் மட்டுமே சாப்பிட முடியும். பல நாட்கள் பசி பட்டினியோடு காலம் கழித்தார்கள்.

ஒருநாள் விவேகானந்தரே பிக்ஷைக்கு செல்லும்போது, பசி காரணமாக தெருவில் மயங்கி விழுந்து விட்டார். அடுத்து மழை பெய்த பிறகே, உணர்ச்சி பெற்று எழுந்து வந்தார்.

இத்தகைய சூழ்நிலையிலும் கூட தியானம், பூஜைகள், சத்சங்கம் என ஈடுபட்டு வந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு தீர்த்த யாத்திரைக்காக அவரவர் விருப்பப்படி புறப்பட்டனர். சுவாமி விவேகானந்தரும் பரிவ்ராஜகராக தனது யாத்திரையைத் தொடங்கினார். இப்படி பாத யாத்திரை செல்பவர்கள் நடந்தே செல்ல வேண்டும். கையில் எந்தவிதமான பணமும் வைத்துக்கொள்ளக் கூடாது. அடுத்த நேரம் உணவு என்பது இறைவனின் சித்தம், என்று சென்றுகொண்டேயிருக்க வேண்டும்.

உண்மையான துறவி எப்படி இருக்க வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

"எத்தனையொ மகான்கள் இந்த ஞான பூமியில்.....

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்....."

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...