ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்...!! அதிகாலையில் எழுந்தவுடன் "சூரிய உதயத்தைப் பார்ப்பது" , அவனது வழக்கம்....!!
ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில்,
ஒரு பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார்.
அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பிய போது,
தலையில் அடிபட்டு இரத்தம் வந்துவிட்டது....!!
கோபம் கொண்ட அரசர்,
பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்து வர செய்து,
தூக்கிலிடும்படி கட்டளை பிறப்பித்தார்.....!!
பிச்சைகாரன் சிறிதும் கலங்கவில்லை.....!!
கல கலவென சிரிக்கத் தொடங்கினான்....!!
அரசருக்கு அவன் சிரிப்பதை பார்த்ததும் கோபம் வந்துவிட்டது ...!!
மற்றவர்களுக்கு திகைப்பு...!!
அரசன் பிச்சைக்காரனை "ஏன் சிரிக்கிறாய்?"
என்று கோபமாக கேட்க,
பிச்சைக்காரன்,
"என் முகத்தில் நீங்கள் விழித்தால் ,
உங்களுக்கு சிறு காயம் மட்டுமே அரசே....!!
ஆனால்,
உங்கள் முகத்தில் நான் விழித்ததால்,......
" என் உயிரே போக போகிறதே" ,...!!
இப்போது மக்களுக்கு மிக நன்றாக புரிந்து விடும்....
மன்னன் முகத்தில் எவன் விழித்தாலும் மரணம் நிச்சயம் என்று...!!
அரசனின் முகம் அவ்வளவு "ராசியான முகம்" ,
என நாடே சிரிக்கும் அரசே...என்றான்..!!
அதை எண்ணி சிரித்தேன்" என்றான்,
அரசனுக்கு இப்போது தான் தான் செய்ய இருந்த தவறு உறைத்தது...!!
தன் தவறை உணர்ந்து தலை குனிந்தான்.
தண்டனை ரத்து செய்யப் பட்டது....!!
தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்....!!
அது இல்லையென்றால்,
சமயத்தில் தன் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.
எதை இழந்தாலும்,
தன்னம்பிக்கையை மட்டும் எப்போதும் இழக்காதீர்கள்....!!
No comments:
Post a Comment