Thursday, July 12, 2018

மரணம்

மரணம் என்ன உணர்த்துகிறது !! மெய் உணர்வோம் !!

மா – ரணம், பெரிய - புண் என்றும் பொருள் கொள்ளலாம் !! நமது வாழ்வில் நம் பிறக்கும் முன் கருவாகி உருவாக தொடங்கியவுடனே கருக்கொண்ட உயிரை ரணபடுத்துகிறோம் !! மனதளவில் !! உடலளவில் !! கருவாகிய இருவரையும் !! அவர்கள் சுற்றத்தாரையும் !!

உருக்கொண்டு பிறக்கிறோம் !! பிறந்தது முதல் !! நம்மையும் நம்மை சார்ந்த உறவுகளையும் ரணபடுத்தியே வாழ்கிறோம் !! வளர்கிறோம் !!

எதற்கு நாமும் நம்மை வளர்த்தவர்கள் போல ?! வளர்த்தவர்களை விட ?! ரணபடவே !!

நாம் மேலும் மேலும் ரணப்பட !! ரணபடுத்த !! உறவுகளை இணைக்கிறோம் !! வசதிகளை ?? சேர்கிறோம் ?? வாரிசுகளையும் உருவாகிறோம் ??!!

உடல் அளவில் ரணப்பட நோயையும் !! மனதளவில் ரணப்பட ஏதோ ஒன்றை சிந்தையில் கொண்டும் ரணபடுகிறோம் !!

ஓர் நிலையில் ரணப்படவேண்டம் என்று நாமே முடிவு செய்தாலும் !! நாமே விரும்பி சேர்த்த யாவும் விடாது ரணபடுத்திகொண்டே இருக்கும் !!

எந்த ரணமும் இல்லை என்று ஓர் நாள் கூட கழியாத என்ற ஏக்கம் பிறக்க ??!! இந்த ரணப்பட்டு ரணப்பட்டு வாழ்ந்த வாழ்வு மாரணமாய் மரணம் எய்துகிறது ??

இந்த மரணத்தை தவிர்க்கவும், மீண்டும்மீண்டும் மரணத்தை அனுபவிக்கா வண்ணம் அருளவும் ஒருவனே இருக்கிறான் !!

அவனை பற்றுங்கள் !! அகமாக ( நம்முள் ) !! புறமாக ( நமக்கு வெளியே ) !!

வாழும்போது ஏன் வாழ்கிறோம் ? எப்படி வாழ்விக்கபடுகிறோம் ? என்று எண்ணம் உதிக்கும் இடத்தை அகமாக நோக்குங்கள் !! உற்றவன் புலபடுவான் !!

ரணமா ? வாழ்வு ?!! என்று உணர்த்துவான் !!

நாமே ரணமாக்கி கொள்வதையும் உணர்த்துவான் !!

அந்த ரணத்தை ஆற்றும் ரகசியமும் நம்முள்ளே !! நமக்கான தனிதன்மையுடன் வெளிபடவைப்பன் !!

ரணமான வாழ்வா ?? ரசிக்கும் வாழ்வா ?? என்று காட்டுவான்

மரணமில்ல பெருவாழ்வும் அருளுவான் !!

திருச்சிற்றம்பலம்

#நற்றுணையாவது_நமச்சிவாயவே

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...