Friday, July 13, 2018

தீராத நோய் தீர்க்கும் திருத்தலங்கள்

1.திருவான்மியூர்-- மருந்து லிங்கம். பிறவி நோய் உட்பட எல்லா நோயும் தீர்க்கும் பெரிய அருமருந்தாக ஈசன் விளங்குகிறார்.  திருவான்மியூர் சென்று அடைந்தார் மேல் சென்று அடையா மற்று இடர் நோயே என்பது தெய்வீக மழலையின் வாக்கு.

2.வைதீசுவரன் கோயில். வைதிய லிங்கம். எல்லா வைதியர்களுக்கும் மேலான  ஒரே பெரிய வைதியர் மருத்துவர் வைதீசுவரர். ரிக் வேத மந்திரத்தால்  வெண்மணல் சிவலிங்கமான தலம். 

3.திருவதிகை (பண்ணுருட்டி அருகே) திருவதிகை வீரட்டானேசுவரர் திருநாவுக்கரசரின் தீராத சூலை நோயைத் தீர்த்து அருளினார்.

4.திருவாசி (திருப்பாச்சிலாச்சிராமம், திருச்சி அருகே)  கொல்லி மழவன் மகளுக்கு உண்டான முயலகன் என்ற முடக்கு வாத நோயை நஞ்சினை அமுதம் ஆக்கிய மணிகண்டர் திருவருளால்  திருஞான சம்பந்தர் தீர்த்து அருளி  எழுந்து நடமாட வைத்தார்.

5.குத்தாலம் (திருத்துருத்தி) மயிலாடு துறை கும்பகோணம் அருகே. திருவொற்றியூரில் கண்ணும் மேனி அழகும் இழந்து நோய் வாய்ப்பட்ட சுந்தரர்  காஞ்சி புரத்தில் ஒரு கண்ணில்  பார்வை பெற்றுக் குத்தாலம் வந்து உத்தர வேதீசுவரர் திருவருளால் திருக்குளத்தில் முழுகி எழுந்த போது நோய் தீர்ந்து நலம் அடைந்து  மேனி அழகும் பெற்றார்.    

6.மதுரை -  பாண்டியனது வெப்பு நோயையும் பிறவிக் கூனையும் மதுரேசர் (சொக்க லிங்கம் வெள்ளியம்பல வாணர்)  திருவருளால் திருஞான சம்பந்தர் தீர்த்து வைத்தார்.

7.திருநாவுக்கரசர் வடநாட்டில் குளத்தில் மூழ்கித் திருவையாற்றுத் திருக்குளத்திலிருந்து எழுந்த போது முதுமை மறைந்து  இளமை பெற்றார்.

                திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...