Sunday, July 8, 2018

மரணத்தை மறந்த மனிதர்கள்

நிரந்தரமற்ற துன்பமயமான இவ்வுலகில் பலர் வாழும் கலை பற்றி போதிக்கின்றனர். ஆனால் ஒருவரும் சாகும் கலை பற்றி சொல்வதேயில்லை. மரணம் என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டு மனிதர்கள் வாழ்கின்றனர். மாமன்னர் யுதிஷ்டிரரிடம், “எது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயம்?” என்று கேட்ட போது, தினம் தினம் அடுத்தவர் இறப்பதைப் பார்த்தும் தான் சாக மாட்டேன் என்று ஒவ்வொரு மனிதரும் நினைப்பதே மிகவும் ஆச்சரியமான விஷயம் என்று பதிலளித்தார். மரணத்தை எதிர்கொள்வது எப்படி? இறுதி யாத்திரைக்கு தயார் செய்வது எப்படி?

*அகத்தியர் பாடல்*
வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது
மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா

*முகுந்தமாலா ஸ்தோத்திரம்*
க்ருஷ்ண த்வதீய-பாத-பங்கஜ பஞ்ஜராந்தம்
அத்யைவ மே விஷது மானஸ-ராஜ-ஹம்ஸ;
ப்ராண-ப்ரயாண-ஸமயே கப-வாத-பித்தை:
கண்டாவரோதன-விதௌ ஸ்மரணம் குதஸ் தே

“எனதருமை கிருஷ்ணரே! இந்த க்ஷணமே எனது மனமாகிய அன்னம் தங்களின் தாமரைத் தண்டுகளைப் போன்ற திருவடிகளை பற்றிக் கொள்ளட்டும். இறக்கும் தருவாயில் எனது தொண்டையில் காற்றும், பித்தமும், சளியும் அடைத்துக்கொள்ளும். அப்போது உங்களை என்னால் எவ்வாறு நினைக்க முடியும்?” (முகுந்த-மால ஸ்தோத்திரம் 33)

*பெரியாழ்வார் திருமொழி*
(பெரியாழ்வார் முதலாயிரம்)
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே!    -1

ஆழ்வாரை பின்பற்றி நாமும், யானைக்கும் அருள் பாவித்த பகவான் மீது நம்பிக்கை கொண்டு, தொடர்ந்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை ஜெபம் செய்ய வேண்டும். பக்தர்கள் செய்யும் சிறிதளவு பக்தியையும் பகவான் நினைவில் வைத்திருப்பார். ஒருவன் தீவிர பக்தனாக வாழும்பட்சத்தில், அவன் தனது மரண தருவாயில், பகவானை மறந்தாலும் பகவான கிருஷ்ணர் அவனை மறக்க மாட்டார், தன்னை அந்த பக்தனுக்கு நினைவுபடுத்தி விடுவார்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...