Thursday, April 18, 2013

சித்திரை திருவிழா 2013

மதுரையில் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,25 காலை 7.31 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். சித்திரை திருவிழாவிற்காக மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி மாவட்ட மக்கள் அழகர்கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்., 23ல் நடக்கிறது. ஏப்.,25ல் காலை 7.31 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்., 27ல் புஷ்ப பல்லக்கு நடக்கிறது.
மதுரை சித்திரை விழா பற்றிய பலவகையான செவி வழி கதைகள் இருந்தாலும், அவ்விழாவின் முக்கியமான அழகர் ஆற்றில் இறங்கும் விஷேசமான சித்ரபெளர்ணமி தினம் பற்றிய என்னுடைய அப்பத்தா சொன்ன கதையோடு சொன்னதை வைத்து விழா பற்றிய சிறு அறிமுகம்.

ஒரு முறை சந்திரன் தான் ஒருவனே நிகரற்ற அழகன் என நினைத்து யானைமுகமும் எலியை வாகனமாக கொண்ட விநாயகரை குருபன் என நிந்திக்க விநாயகர் சந்திரனுக்கு விரைவில் அழகொழிந்து பிறரை நிந்திக்கும் உன்னை போன்றவர்களுக்கு படிப்பினையாக வளர்ந்து தேயும் பாங்காய் இருப்பாய் என சாபம் கொடுக்க, சந்திரன் சிவனிடம் முறையிட சிவனோ உன்னுடைய அகம்பாவத்துக்கு அதுவே சரியான தண்டனை, ஆகவே அதை ஒன்றும் செய்வதற்கில்லை என பதிலுரைக்கிறார். மேலும் சூரியன் சுட்டெரிக்கும் மாதமான சித்திரையிலும் சந்திரனாகிய உன் திறன் உலகுக்கு தெரியவேண்டியும் சித்திரை மாதத்தில் வரும் முழுநிலவு தினமன்று ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தறே உன் பங்கும் இருக்கவேண்டும் என சாபவிமோசனமும் கொடுக்கிறார். அதே சித்திரபெளர்ணமி தினமன்று மீனாட்சி திருவிழா காண வரும் அழகர் ஆற்றை கடக்க முயல்கிறார். அதிலும் ஒரு உட்கதை ஒன்றும் உள்ளது, மண்டூக மகிரிஷி 'க்கு சாபவிமோசனம் அளிக்கவே அழகர் ஆற்றில் இறங்குவதாகவும் அக்கதைகள் நீளும். இக்கதைகள் உண்மையோ, இல்லை உறுதியாக பொய்யாக இருந்தாலும் திருவிழாக்கள் நடப்பதற்குண்டான காரணம் ஒன்றே ஒன்றுதான், அது மக்கள் அனைவரும் எந்த உயர்வும் தாழ்வும் இல்லாமல் ஒரே இடத்தில் குழுமிக்க வேண்டும் என்பதே.

நேற்றிலிருந்து வைகையாற்றிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு விழா நடைப்பெறும் இடம் அருகே நீர் தேக்கப்பட்டது. அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவத்திற்க்காக பிரத்யேகமாக நீர் பாதையும் கட்டப்பட்டு இருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க இன்று காலை சுமார் ஆறு மணியளவில் பச்சை பட்டு உடுத்தி அழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். அதன்பின்னர் நடைப்பெற்ற உற்சவத்திற்கு பிறகு மண்டகப்படி ஆரம்பித்தது. விழாவை நேரடியாக முன்று நான்கு மணி நேரமும் ரசித்ததில் ஒரு சிறிய மனநிறைவு உண்டாகியது.
முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா: விழாக்கோலம் பூண்டது மதுரை

மதுரையில் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,25 காலை 7.31 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். சித்திரை திருவிழாவிற்காக மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி மாவட்ட மக்கள் அழகர்கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்., 23ல் நடக்கிறது. ஏப்.,25ல் காலை 7.31 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்., 27ல் புஷ்ப பல்லக்கு நடக்கிறது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...