இது சந்திரனின் நட்சத்திரம்.
1. பரணி
2. கார்த்திகை
3. மிருகசீரிஷம்
4. புனர்பூசம்
5. பூசம்
6. ஆயில்யம்
7. மகம்
8. பூரம்
9. உத்திரம்
10. கேட்டை
11. மூலம்
12. பூராடம்
13. உத்திராடம்.
14. உத்திரட்டாதி
15. ரேவதி
ஆகிய 15 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும். பூரட்டாதி 4ஆம் பாதம் மட்டும் பொருந்தும்
இவற்றுள்
அவிட்டம் 3 &4ஆம் பாதங்களும், பூரட்டாதி 1, 2 & 3ஆம் பாதங்களும்
கும்ப ராசிக்கு உரியனவாகும்.. ஜோதிடர்கள் கன்னிக்கு ஆறாம் இடம் கும்பம்
கும்பத்திற்கு எட்டாம் இடம் கன்னி ஆகவே அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8
position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது
நல்லது.
மேஷ ராசிக்கு உரிய அஸ்விணி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்
ஆகிய நட்சத்திரங்களுக்கு 8/6 நிலைப்பாடு வரும். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது
நல்லது.
மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் ஆகியவை சிம்ம ராசிக்கு
உரிய நட்சத்திரங்களாகும். கன்னிக்கு சிம்மம் பன்னிரெண்டாம் வீடு. (12/1
position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த நட்சத்திரங்களையும்
விலக்கிவிடுவது நல்லது.
அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 8 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்
ரோஹிணி,
திருவாதிரை, சுவாதி, திருவோணம், சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப்
பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும்,
பையனுக்கும் ஹஸ்தம் ஏக நட்சத்திரமாக இருந்தால் பொருந்தும். என்ன ஒரே
நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும்,
அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப்
பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே
ராசியைத் தவிர்ப்பது நல்லது.
அஸ்விணி, சித்திரை 1 & 2ஆம்
பாதங்கள், விசாகம், அனுஷம், அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள், பூரட்டாதி 1, 2
& 3ஆம் பாதங்கள் மத்திம பொருத்தம் உள்ளவையாகும்.
சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் பொருந்தாது!
Subscribe to:
Post Comments (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...
No comments:
Post a Comment