இது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சனீஷ்வரனுக்கு உரிய நட்சத்திரம்!
இந்த நட்சத்திரத்திற்கு
1. அஸ்விணி
2. கார்த்திகை
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. புனர்பூச்ம்
6. ஆயில்யம்
7. மகம்
8. உத்திரம்
9. ஹஸ்தம்
10. சித்திரை
11. சுவாதி
12. கேட்டை
13. திருவோணம்
14. சதயம்
15. ரேவதி
ஆகிய 15 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
அஷ்டம
சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள்.
விருச்சிக ராசிக்கு மிதுனம் எட்டாம் வீடு. மிதுனத்திற்கு விருச்சிகம் ஆறாம்
வீடு.. மிருகசீரிஷம் 3 & 4ம் பாதங்கள், மற்றும் புனர்பூசம் 1, 2 &
3ம் பாதங்கள் மிதுன ராசிக்கு உரியவை ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.
விருச்சிக
ராசிக்கு துலாம் ராசி 12ம் வீடு. துலாம் ராசிக்கு விருச்சிகம் இரண்டாம்
வீடு. ( 1/12 & 12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள்.
சித்திரை 3 & 4ம் பாதங்கள். மற்றும் சுவாதி துலாம் ராசிக்கு உரிய
நட்சத்திரங்களாகும் ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.
ஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
பரணி,
பூசம், பூரம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப்
பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் அனுஷம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், மத்திம பொருத்தம் உண்டு. ஆகவே அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
திருவாதிரை, மூலம், அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்களும் பொருந்தாது.
விசாகம்,
உத்திராடம், பூரட்டாதி ஆகிய 3 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம்
(average) உள்ளவை. அவறையும் தெரிவு செய்து எடுத்துக் கொள்ளலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...
No comments:
Post a Comment