இது ராகுவின் நட்சத்திரம்.
1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. மிருகசீரிஷம்
5. புனர்பூசம்
6. உத்திரம்
7. சித்திரை
8. விசாகம்
9. மூலம்
10. பூராடம்
11. உத்திராடம்
12. அவிட்டம்
13. பூரட்டாதி
14. உத்திரட்டாதி
15. ரேவதி
ஆகிய 15 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
இதில்
அனுஷம், கேட்டை, விசாகம் 4ஆம் பாதம் ஆகியவை விருச்சிக ராசிக்கு
உரியதாகும். ஜோதிடர்கள் மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம். விருச்சிக
ராசிக்கு எட்டாம் வீடு மிதுனம்.. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to
each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.
அதே
நிலைப்பாடு உத்திராடம் 2, 3 & 4 பாதங்கள், மற்றும் திருவோணம்,
அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களுக்கு உண்டு. அவைகள் மகர
ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. மிதுனத்திற்கு மகரம் எட்டாம் வீடு.
மகரத்திற்கு மிதுனம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம்
என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.
அதே நிலைப்பாடு
கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிஷம் 1, 2 ஆம்
பாதங்களுக்கும் உண்டு. அவைகள் ரிஷப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.
மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு. ரிஷபத்திற்கு மிதுனம் இரண்டாம்
வீடு. (1/12 position to the rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும்
விலக்கிவிடுவது நல்லது.
ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
ரோஹிணி,
ஹஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப்
பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் திருவாதிரை ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு.
புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம் ஆகிய 4 நட்சத்திரங்களும் பொருந்தாது!
மகம், பூரம் ஆகிய 2 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
Subscribe to:
Post Comments (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...
No comments:
Post a Comment