இது சூரியனின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்திற்கு,
1. அஸ்விணி
2. பூசம்
3. ஆயில்யம்
4. மகம்
5 ஹஸ்தம்
6. சுவாதி
7. அனுஷம்
8. கேட்டை
9. மூலம்
10. சதயம்
11. ரேவதி
ஆகிய 11 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
இதில்
ஹஸ்தம் கன்னி ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மேஷத்திற்கு ஆறாம் இடம்
கன்னி வீடு. கன்னிக்கு எட்டாம் வீடு மேஷ வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8
position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது
நல்லது.
அதே நிலைப்பாடு அனுஷம், கேட்டை நட்சத்திரங்களுக்கும் உண்டு.
அது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு விருச்சிகம்
எட்டாம் வீடு. விருச்சிகத்திற்கு மேஷம் ஆறாம் வீடு. (6/8 position to each
rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.
அதே
நிலைப்பாடு ரேவதி நட்சத்திற்கும் உண்டு. அது மீன ராசிக்கு உரிய
நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு மீனம் பன்னிரெண்டாம் வீடு. மீனத்திற்கு
மேஷம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள்.
ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.
ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
புனர்பூசம்,
உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும்
ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது
நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் கார்த்திகை ஒரே நட்சத்திரமாக
இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திம
பொருத்தம் ஆகும் அதாவது சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேராவிட்டால் இதைத்
தெரிவு செய்யலாம்!
மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்கள் (மிதுன ராசி)
பொருந்தாது. மிருகசீரிஷம் 1 & 2ஆம் பாதங்கள் மத்திம பொருத்தம் ஆகும்
அதாவது சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேறாவிட்டால் இதைத் தெரிவு செய்யலாம்!
1. பரணி
2. ரோஹிணி
3. திருவாதிரை
4. பூரம்
5. சித்திரை 1 & 2ஆம் பாதங்கள் (கன்னி ராசி) பொருந்தாது. சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் (துலாம் ராசி) மத்திம பொருத்தம்
6. திருவோணம்
7. அவிட்டம்
8. உத்திரட்டாதி
ஆகியவை
மத்திம பொருத்தம் உடையவை. அதாவது சராசரி - average பொருத்தம் மத்திம
பொருத்தம் உடையவை. சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த
நட்சத்திரங்களில் 8ல் ஒன்றைத் தெரிவு செய்யலாம்
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும் , கிறிஸ்துவர்களாலும் , புத்தமதத்தினராலும் , சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களி...
No comments:
Post a Comment