Saturday, April 20, 2013

பொன்னாவிரை-CASSIA SENNA.






1. மூலிகையின் பெயர் :- பொன்னாவிரை.


2. தாவரப்பெயர் :- CASSIA SENNA.


3. தாவரக்குடும்பம் :- CAESALPINIACEAE.


4. பயன் தரும் பாகங்கள் :- இலை வேர் முதலியன.


5. வளரியல்பு :- பொன்னாவிரை ஆங்கிலத்தில் ALEXANDRIAN என்று சொல்வர். எல்லா வகை நிலங்களிலும் வளரக் கூடிய சிறு செடி. இது சுமார் 3 அடி உயரம் கூட வளரக்கூடியது. இதன் இலைகள் கூரான முனையுடையவை. வெழுத்த பச்சை நிறமாக இருக்கும். நான்கு ஜோடி கூட்டிலையாக இருக்கும். இதன் பூக்கள் ஆவரம்பூப் போல் மஞ்சளாக இருக்கும். காய்கள் தட்டையாக நீண்டிருக்கும். காய்கள் காய்ந்த பின் கருப்பாக இருக்கும், வெடிக்கக் கூடியவை. தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளரக் கூடியது. விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.


6. மருத்துவப் பயன்கள் :- பொன்னாவிரை நுண் புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.


பொன்னாவிரை இலை, விதை சமன் அரைத்து எலுமிச்சை அளவு வெந்நீரில் கொள்ளச் சுகபேதியாகும், மோர் சாப்பிடப் பேதி நிற்கும்.


இதன் இலையுடன் கீழாநெல்லி சமன் சேர்த்து நெல்லிக்காயளவு காலை, மாலை, மோரில் கொள்ள மஞ்சட்காமாலை தீரும்.


பொன்னாவரை வேர் 15 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு10 கிராம், அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி காலை, மாலை 100 மி.லி. வீதம் கொடுத்து வரப் பித்தபாண்டு தீரும்.


இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசி 1 மணி நேரம் கழித்துக் குளித்துத் தேங்காய் எண்ணெய் தடவச் சிரங்கு 3 நாளில் மறையும்.


கர்பிணிப் பெண்களும், குடல் புண் உள்ளவர்களுக்கு இந்த மருந்துகளைக் கொடுக்கக் கூடாது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...