இது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் குரு பகவானின் நட்சத்திரம்!
இந்த நட்சத்திரத்திற்கு
1. மிருகசீரிஷம்
2. ஆயில்யம்
3. மகம்
4. சித்திரை
5. விசாகம் (ஏக நட்சத்திரம்)
6. மூலம்
7. திருவோணம்
8. அவிட்டம்
ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள்.
விருச்சிக
ராசிக்கு மிதுனம் எட்டாம் வீடு. மிதுனத்திற்கு விருச்சிகம் ஆறாம் வீடு..
மிருகசீரிஷம் 3 & 4ம் பாதங்கள் மிதுன ராசிக்கு உரியவை ஆகவே அவற்றை
விலக்கி விடுவது நல்லது.
விருச்சிக ராசிக்கு துலாம் ராசி 12ம் வீடு.
துலாம் ராசிக்கு விருச்சிகம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position
to each rasi) வேண்டாம் என்பார்கள். சித்திரை 3 & 4ம் பாதங்கள்
துலாம் ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும் ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது
நல்லது.
ஆக மொத்தத்தில் 6 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
கார்த்திகை,
புனர்பூசம், உத்திரம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும்
ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது
நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் விசாகம் ஒரே நட்சத்திரமாக
இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு. ஆகவே அதைக் கணக்கில்
எடுத்துக்கொள்ளலாம்.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, புனர்பூசம்,
ஹஸ்தம், அனுஷம், கேட்டை, சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 10
நட்சத்திரங்களும் பொருந்தாது.
அஸ்விணி, ரோஹிணி, பூசம், சுவாதி, ஆகிய
4 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவறையும் தெரிவு
செய்து எடுத்துக் கொள்ளலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும் , கிறிஸ்துவர்களாலும் , புத்தமதத்தினராலும் , சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களி...
No comments:
Post a Comment