Saturday, April 20, 2013

திருநீறு


சிவா வழிபாட்டின் நிறைவாக வழங்கப்படும் பிரசாதம் திருநீறு ஆகும் . சைவ வழிபாட்டில் திருநீறும் ,வைணவ வழிபாட்டில் நிறைவாக துளசியும் ,தீர்த்தமும் வழங்கபடுவது இந்து சமய மரபு .
திருநீற்றின் வகைகள்

திருநீறு தயாரிப்பதில் மூன்று வகைகள் உள்ளது .

கற்பம்:-

நோயற்றதும் ,கன்றை ஈன்றதுமான பசுவின் சாணத்தை மண் ,தூசு ,கற்க்கல், போன்றவை நீக்கி தாமரை இலையில் மந்திர பூர்வமாக சாணம் , கோமியம் , பால் , தயிர், நெய் யென்று அழைக்கபடும் பஞ்சகவ்வியம் கலந்து பிசைந்து உருண்டைகளாக ,சுத்தமான இடத்தில் வைத்து உலர்த்திட வேண்டும் . பிறகு மந்திரப்பூர்வமாக சிவ அக்கினியில் வைத்து எரித்து எடுக்க வேண்டும் . அதன் பிறகு மெல்லிய வெள்ளை துணியில் வைத்து சலித்து எடுக்க வேண்டும் . இந்த திருநீறு கற்பம் எனப்படும் .

அணுகற்பம் :-

காட்டிலும் ,ஆற்றங்கரையிலும் உலர்ந்திரிக்கின்ற பசுவின் சாணத்தைக் கொண்டு வந்து தூசு ,கல், போன்றவற்றை நீக்கி கோசலம் (கோமியம்) விட்டு பிசைந்து உருண்டைகளாக்கி உலர்ந்த பின் சிவ நாமத்துடன் ஓம அக்கினியில் எரித்து எடுத்த திருநீறு அணு கற்பம் என்று அழைக்கபடும் .

உப கற்பம் :-

காட்டுத்தீயினால் வெந்து கிடைக்கின்ற சாம்பல் ,பசுவின் தொழுவத்தில் வெந்து கிடைக்கின்ற சாம்பல் ஆகிய இச் சாம்பல்களில் கோசலத்தை விட்டு பிசைந்து உருண்டைகளாக்கி உலர்ந்த பின் சிவ மந்திரத்துடன் ஓம அக்கினியில் எரித்து எடுக்கபடும் .திருநீறு உபகற்பம் என்று அழைக்கப்படுகிறது .

கற்பம் ,அணுகற்பம் ,உபகற்பம் ஆகிய மூன்று வகை திருநீற்றில் கற்பமே மிகசிறந்த திருநீறாகும்.


திருநீற்றின் சிறப்பு ;-

திருநீரை பக்திபூர்வமாக அணியும் பக்தனின் ஆணவம் ,மாயை , கர்மம், ஆகிய மூன்றையும் சுட்டு நீறு(சாம்பல்) படுத்துவதால் இதற்க்கு நீறு யென்று பெயர் . இதன் தத்துவம் உலகம் நிலையில்லாதது அதில் வாழ்கின்ற நம் வாழ்வும் நிலையில்லாதது .என்றாவது ஒரு நாள் சாம்பலாகும் என்பதை உணர்த்தி நம்மை நல்வாக்கு ,நற்செயல் நற்சிந்தனையோடு இருக்க தூண்டுவது திருநீறு.

காப்பு ரட்சை;-

உடலின்றி தீய ஆன்மவாக இருக்கின்ற பேய், பிசாசு, வைப்பு, ஏவல், போன்றவை நம்மை அண்டாமல் காப்பாற்றுவதால் திருநீருக்கு காப்புரட்சை என்ற பெயரும் உள்ளது . மென்மையாக சிறுசிறு துளியாக இருப்பதால் திருநீறுக்கு பொடி,பஸ்பம்,தூளிதம்,என்ற பெயர்களும் உண்டு .


ஐஸ்வர்யம் ;-

திருநீறு என்றாள் ஐஸ்வர்யம் ,செல்வச்செழுமை என்ற பொருள்படும். எனவே விபூதியான திருநீறை கீலே சிந்துதல் கூடாது .இதனை நெற்றியில் அணிவதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் .ஆகவேதான் அவ்வையாரும் நீறில்லா நெற்றி பாழ் என்று பாடினார் .

திருஞான சம்பந்தரும் திருவாசகத்தில் திருநீற்றின் பெருமைகளை கூறும் வகையில் திருநீற்று பதிகம் என்னும் ஒன்றை பாடியுள்ளார் .

மந்திரமாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்திரமாவது நீறு
துதிக்கபடுவது நீறு

என்கிறார், திருஞான சம்பந்தர் .

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...