பசு
மாட்டிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை ஒரு குறிப்பிட்ட
விகிதாசாரத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவைக்கு பஞ்சகவ்யம் என்று பெயர்.
பசும்பால் 7 பங்கு, பசுந்தயிர் 3 பங்கு, பசு நெய் 1 பங்கு, கோஜலம் (பசுவின்
சிறுநீர்) 1 பங்கு, பசுங்சாணத்தைக் கரைத்து வடிகட்டிய நீர் (கோமய ரஸம்)
அரைபங்கு என்னும் ஐந்தையும் கலந்து தர்பைப் புல் ஊறிய நீரில் கலந்து
உடனடியாக உட்கொள்ள வேண்டும். வேதம் கற்றவர்கள் கோ சூக்தம் என்னும்
மந்திரத்தை உச்சரித்து பஞ்சகவ்யம் தயாரிப்பார்கள். இதை அருந்தினால் மனித
சரீரம் தூய்மை அடைகிறது என்று நமது சாஸ்திரம் கூறுகிறது. பழங்காலத்தில்
ஆலயங்களில் பூஜை செய்பவர்கள் தினசரி பஞ்சகவ்யம் அருந்திவிட்டுத்தான்
கர்பகிரகத்துக்குள் பிரவேசிக்க வேண்டும் என்னும் விதி பின்பற்றப்பட்டு
வந்தது.
பஞ்சகவ்யம் சாப்பிடுவோர்க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல
நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் பஞ்சகவ்யத்துக்கு உண்டு. அறிவியல் ரீதியாக
இது எந்த அளவுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஆனால் தஞ்சை
சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி பிரிவில் பஞ்சகவ்யம் பற்றி அரிய
தகவல்கள் பல உள்ளன. கோமூத்திரத்துக்கு வருணனும், கோமயத்துக்கு அக்னியும்,
பாலுக்கு சந்திரனும் தயிருக்கு வாயுவும் நெய்க்கு விஷ்ணுவும் அதிபதிகள்
என்று ஸ்ம்ருதிகள் கூறுகின்றன. இதை பஞ்சகௌவ்யம் என்றும் கூறுவர்.
ஆபிசாரப்ரயோகம், காத்து, கருப்பு, துர்தேவதை தொல்லை போன்றவற்றால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பஞ்சகவ்யம் கொடுத்தால் அவை நீங்கிவிடும்
.
அபிதான சிந்தாமணி என்னும் நூலில் ஐந்து வெவ்வேறு நிறத்தில் உள்ள ஐந்து
பசுக்களிடம் இருந்து கிடைத்த ஐந்து பொருட்களைக் கொண்டு பஞ்சகவ்யம்
தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment